#BIG BREAKING: உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா!

#BIG BREAKING: உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா!

Update: 2021-04-05 15:52 GMT

ஊழல் புகாரில் சிக்கி, சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஊழல் புகாரில் சிக்கியிருந்தது நாடு முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாதம் தோறும் ரூபாய் 100 கோடி மாமூல் வசூல் செய்து தர வேண்டும் என உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனக்கு உத்தரவிட்டதாக, முன்னாள் மும்பை காவல்துறை ஆணையர் குற்றம் சுமத்தியிருந்தார். இந்த புகார், மகாராஷ்டிரா  அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 


பின்னல், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டிருந்தது. இன்னும் 15 தினங்களுக்குள் விசாரணையை தொடங்க வேண்டும் என சிபிஐக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சர் மீதான புகாரில், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தர வேண்டும் என தனக்கு உத்தரவிட்டிருந்ததாக மும்பை காவல்துறை ஆணையர்  முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். மும்பை காவல்துறை ஆணையரின் இந்த புகாரையடுத்து அனில் தேஷ்முக் பதவியில் இருந்து விலக வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று அனில் தேஷ்முக் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Tags:    

Similar News