பிரியங்கா காந்தியுடன் சென்ற வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.

டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின்போது, உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரைச் சேர்ந்த நவ்நீத் என்பவர் பலியானார். அவர் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்ததாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார். 

அப்போது, அவரது வாகனத்தின் பின்னே காவல்துறை, கட்சி நிர்வாகிகள் வாகனம் அணிவகுத்துச் சென்றன. ஹாபூர் சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

Tags: