#BIG NEWS:- இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிப்பு..!
#BIG NEWS:- இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் நீட்டிப்பு..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சரவை விரிவாக்கம், கொரோனா 3வது அலை பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
தொடர்ந்து, இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் கீழ் இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.