#BIG NEWS:- நாடே எதிர்பார்த்த ஜி.எஸ்.டி-குள் பெட்ரோல், டீசல்? - நிதியமைச்சர் சொன்ன பதில்..!!
#BIG NEWS:- நாடே எதிர்பார்த்த ஜி.எஸ்.டி-குள் பெட்ரோல், டீசல்? - நிதியமைச்சர் சொன்ன பதில்..!!
நாட்டில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை கடந்த 2017- ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ளது. ஜி.எஸ்.டி. நடைமுறை அமலுக்கு வந்தது முதல் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் மத்திய நிதிமந்திரி தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது,
- பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் இதுவல்ல என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
- கொரோனா மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரிச்சலுகை டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
- குறிப்பிட்ட வகை உயிர் காக்கும் மருந்துகளுக்கும், ஜி.எஸ்.டி., வரி விலக்கு அளிக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் கருவிகளுக்கு 5 சதவீதம் வரி குறைக்கப்பட்டு உள்ளது.
- தசைநார் சிதைவு நோய்க்கு வழங்கப்படும் 2 மருந்துகளுக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு.
- கேன்சர் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி., வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு.
- பயோ டீசலுக்கான ஜி.எஸ்.டி., வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் ஆக குறைப்பு.
- ஸ்விக்கி, ஜொமாடோ உள்ளிட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளும் உணவு டெலிவரிக்கு ஜி.எஸ்.டி., வரி வசூலிக்ககப்படும்.
- கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.ஜிஎஸ்டி போர்ட்டலில் தொழில்நுட்ப சிக்கல்களால் ஏற்றுமதியாளர்கள் ஐடிசி( Input Tax Credit) வரியை திரும்பப் பெறுவதில் உள்ள சிரமம் காரணமாக இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.