கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில், கொரோனா பரவல் சீனாவில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் வேற்றுருவாக்கம் அடைந்து, முதல் அலை, இரண்டாம் அலை என்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.தொடர்ந்து கொரோனா வைரஸின் மாறுபாடுகள் புதிது புதிதாக உருவாகி மரணங்களை ஏற்படுத்தியது.

கடந்த சில மாதங்களாக உலகளவில் குறைந்த வந்த தொற்று, தற்போது குறைந்த தடுப்பூசி கொண்ட நாடுகளில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா மாறுபாடுகளில் ஒன்றான டெல்டாவின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளன. எலக்ட்ரான் நுண்ணோக்கியில் தெரியும் கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புகைப்படங்களே வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் வெக்டர் அறிவியல் மையத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா மாறுபாட்டின் புகைப்படங்கள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறைய என்பது குறிப்பிடத்தக்கது.


 


 

Tags: