#BIG NEWS:- மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புகிறேன்- யுவராஜ் சிங் அதிரடி...!
#BIG NEWS:- மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புகிறேன்- யுவராஜ் சிங் அதிரடி...!
மக்களின் கோரிக்கையை ஏற்று அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவதாக யுவராஜ் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டுள்ள அவர், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் கடவுளின் ஆசிக்கு இணங்க, மக்களின் கோரிக்கையை ஏற்று, அடுத்தாண்டு பிப்ரவரி முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், எப்போதும் போல எனக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். கடுமையான நேரங்களிலும் ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்து வருவது மகிழ்ச்சியை வழங்குவதாக அந்த பதிவில் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங் முழுமையாக குணமடைந்து கடந்த 2019-ம் ஆண்டு கட்டாக்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அப்போது 127 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். அதில் 21 போர்கள், 3 சிக்ஸர்கள் அடங்கும்.
இதுவரை 40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் தொடர்கள், 58 டி20 தொடர்களில் யுவராஜ் சிங் விளையாடியுள்ளார். 17 சென்சூரிஸ், 71 ஹாஃப்-சென்சூரிஸ் என மொத்தம் 11,000 ரன்களை அவர் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி 148 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.