தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்... தினேஷ் குண்டுராவ் மகிழ்ச்சி!

தமிழகத்தில் மிகப் பெரிய வெற்றி கிடைக்கும்... தினேஷ் குண்டுராவ் மகிழ்ச்சி!

Update: 2021-03-07 16:50 GMT

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து கூட்டணி கட்சிகள், தொகுதிப்பங்கீடு, பிரச்சாரக் கூட்டங்கள் என பரபரப்பாக அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன.அரசியல் பிரச்சாரக் களம் சூடுபிடித்து வருகிறது. அந்த வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அண்ணா அறிவாயலத்தில் நடைபெற்ற இறுதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும்  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார் .

இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி  ''சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு முழு திருப்தியளிக்கிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி. தமிழக மக்கள் நிச்சயம் எங்களுக்கு பெரும் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News