மாடல் அழகி ஷனம் பிரசாத் என்பவரை  நிச்சயதார்த்தம் செய்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கும் பி்க்பாஸ் புகழ் தர்ஷன் மீது புகார் அளிக்க காவல் ஆணையர் அலுவலகம் வந்துள்ளார் ஷனம் ஷெட்டி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தர்ஷன்.  மொத்தம் 15 போட்டியாளர்கள்.நிகழ்ச்சியின் கடைசி வரை வந்த தர்ஷன் வெற்றியாளராவார் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த வாய்ப்பு முகெனுக்கு கிடைத்தது. இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

                                               

                                               

                                               

யார் இந்த தர்ஷன் ?
சாஃப்ட் வேர் துறையில் இருந்தவர் மாடலிங்கில் நுழைந்து, பல துன்பங்களுக்கு பிறகு முன்னணிக்கு வந்தவர்.  ஏழ்மையான குடுமபத்திலிருந்து வந்து சினிமா ஆசையில் ஹிரோவாக ஆசைப்பட்டவர். பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து உள் நுழைந்து மக்கள் மனதை கொள்ளை அடித்தவர் 

இந்நிலையில் தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்க வந்துள்ளார் ஷனம் ஷெட்டி.

newstm.in

Tags: