தடுப்புச்சுவரில் பைக் மோதல்.. பாலத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவன் பலி..!

தடுப்புச்சுவரில் பைக் மோதல்.. பாலத்தில் இருந்து விழுந்த பள்ளி மாணவன் பலி..!

Update: 2022-01-20 11:01 GMT

வாணியம்பாடியை அடுத்த மாதகடப்பா பகுதியைச் சேர்ந்தவர் திலிப் குமார் (22). இவர், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தார்.

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இவரது உறவினர் சந்தோஷ் மகன் ஸ்ரீகாந்த் (14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திலிப்குமார், ஸ்ரீகாந்தை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு சேத்துப்பட்டுக்கு புறப்பட்டார். இரவு சுமார் 10 மணி அளவில் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். ஸ்ரீகாந்த் சுமார் 40 அடி உயர பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். திலீப்குமார் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் ஸ்ரீகாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த திலிப்குமார் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News