ராஜபாளையம் தொகுதியின் நடிகை கௌதமி போட்டி! பாஜக அறிவிப்பால் கடுப்பான எடப்பாடி!!

ராஜபாளையம் தொகுதியின் நடிகை கௌதமி போட்டி! பாஜக அறிவிப்பால் கடுப்பான எடப்பாடி!!

Update: 2021-02-28 15:03 GMT

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளன. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகளை கூட்டணி தலைமை கட்சிகள் விரிவுப்படுத்தியுள்ளன. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவின் செயல் அக்கூட்டணி கட்சியினருக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக கௌதமி உள்ளார். இந்நிலையில் அங்கு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலிடத் தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில் சுதாகர் ரெட்டி பேசுகையில், ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கௌதமி வெற்றிபெற வாழ்த்துக்கள். அனைவரும் அதற்காக பாடுபட வேண்டும் என பேசினார். இதற்கு அக்கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுதாகர் ரெட்டி, கௌதமியை பாஜக சார்பில் வேட்பாளராக நாங்கள் முடிவு எடுத்துள்ளோம். கூட்டணி கட்சிகளுடன் முறையான விதிமுறைகளை அனுசரித்து பேச்சுவார்த்தை நடைபெறும். இறுதி முடிவு எந்த நிலைபாட்டிலும் வெளியாகலாம் என்று கூறினார்.

தேர்தல் அறிவித்த நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு செய்யப்படாத நிலையில் வேட்பாளர் அறிவித்து பேசியது கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.  

newstm.in


 

Tags:    

Similar News