பாஜக அரசு அசத்தல்! மின்னணு முறையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன் !
பாஜக அரசு அசத்தல்! மின்னணு முறையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் நிர்மலா சீதாராமன் !
இந்திய வரலாற்றில் 2021-22 -ம் ஆண்டுக்கான காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவீதமாக சரிந்தது. இந்நிலையில், சற்று முன்னர் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையில் 2021-22 -ம் ஆண்டுக்கான காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சற்று முன்னர் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் எம்.பி-க்கள் ஜஸ்பிர் சிங் கில், குர்ஜித் சிங் ஆகியோர் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு உடையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் காகிதம் இல்லாத முதல் பட்ஜெட்டை ஆர்வமுடன் கவனத்து வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கலின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகத்திலேயே இந்தியா தலைநிமிர்ந்து நிற்கிறது. காரணம், இன்று, இந்தியாவில் இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை நமது சொந்த நாட்டின் குடிமக்களுக்கு மட்டும் அல்லாது அண்டை நாடுகளுக்கும் பயன் அளிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், நம்பிக்கை என்பது விடியல் இன்னும் இருட்டாக இருக்கும்போது, ஒளியை உணரும் பறவை” என்ற தாகூரின் கவிதையை குறிப்பிட்டு, ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றியை போற்றினார்.