கேரளாவில் அவ்வப்போது கொலைகள் நடந்து வருவது மக்களை பெரும் பதற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

அதாவது, இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது அவர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷான் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனிடையே, கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கொலை செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், பா.ஜ.கவின் ஒபிசி மோர்ச்சா செயலாளர் ரஞ்சித் சீனிவாசனை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

ரஞ்சித் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென ஆயுதங்களுடன் புகுந்த சிலர் அவரை தாக்கியுள்ளனர். மேலும் கத்தி, அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அதிக ரத்தம் வெளியேறிய நிலையில் அவர் உயிரிழந்தார். 

கே.எஸ் ஷான் இறந்த அடுத்த நாளே பா.ஜ.க தலைவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது பழிவாங்கும் நோக்கத்தினால் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதையொட்டி ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Tags: