செக்ஸ் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர்.. ஆடியோ வெளியானதால் பரபரப்பு !!
செக்ஸ் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர்.. ஆடியோ வெளியானதால் பரபரப்பு !!
கோவா உட்பட பல மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு பாஜக, காங்கிரஸ் மட்டுமல்லாது மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் களமிறங்கவுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி ஆளும் பாஜகவின் ஒரு அமைச்சர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், 15 நாட்களில் பாஜக அவரை அமைச்சரவையில் இருந்து நீக்காவிட்டால் அந்த அமைச்சரின் பெயரை வெளியிடுவோம் என அம்மாநில காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது கோவா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. எனினும் பாஜக தரப்பில் சவால் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கோவா நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மிலிந்த் நாயக் பாலியல் தொல்லை அளித்ததாக கோவா மாநில காங்கிரஸ் தலைவர் கிரிஷ் சோடாங்கர் குற்றம்சாட்டினார்.
மேலும், பா.ஜ.க அமைச்சரும், பாதிக்கப்பட்ட பெண்ணும் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு, அந்த ஆதாரங்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார். மேலும் பாதிக்கப்பட்ட பீகார் மாநில இளம்பெண் தற்போது பீகாருக்கு சென்றுவிட்டார். அவருக்கு நியாயம் கிடைக்க உதவும்படி பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் ஒன்றையும் கிரிஷ் சோடாங்கர் அனுப்பினார்.
காங்கிரஸ் கட்சியின் தொடர் புகார்களைத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்த பா.ஜ.க அமைச்சர் மிலிந்த் நாயக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அடுத்தாண்டு கோவாவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் பாலியல் புகாரில் சிக்கி பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
newstm.in