முதலமைச்சர் முன்னிலையில் பாஜக அமைச்சர், காங். எம்.பி. இடையே தள்ளு முள்ளு.. மைக்கை பிடுங்கி எறியும் வீடியோ !

முதலமைச்சர் முன்னிலையில் பாஜக அமைச்சர், காங். எம்.பி. இடையே தள்ளு முள்ளு.. மைக்கை பிடுங்கி எறியும் வீடியோ !

Update: 2022-01-03 19:35 GMT

முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.யும் பாஜக அமைச்சரும் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் அரசு விழா நடைபெற்றது. விழாவில் மாநில அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.பி., அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அரசு விழாவில் பேசிய அம்மாநில உயர்க்கல்வித்துறை அமைச்சர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். அமைச்சரின் பேச்சை கேட்டு கோபம் அடைந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.சுரேஷ் மேடையிலேயே அமைச்சரை கண்டித்தார்.

சிறிது நேரத்தில் காங்கிரஸ் எம்பியுடன் அமைச்சரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து மேடைக்கு கீழே இருந்த பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனல் பறக்கும் வகையில் வார்த்தைகளை கொண்டு மோதிக் கொண்டுள்ளனர். மற்றொரு காங்கிரஸ் நிர்வாகி மைக்கை பிடுங்கி எறிந்தார்.

இருவரின் ஆதரவாளர்களும் மேடை மீது ஏறிய நிலையில் பாஜகவினரை கண்டித்து காங்கிரசார் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அதிக அளவிலான போலீசார் அங்கு வந்திருந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருதரப்பினரையும் விலக்கி பதற்றத்தை தனித்தனர். 

கர்நாடகா முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் மாநில அமைச்சரும் எதிர்க்கட்சி எம்.பி.யும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

newstm.in

Similar News