பாஜக எம்எல்ஏ திடீர் மரணம்! கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்குவந்தப்போது சோகம்!!

பாஜக எம்எல்ஏ திடீர் மரணம்! கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்குவந்தப்போது சோகம்!!

Update: 2021-06-06 16:55 GMT

இமாச்சல பிரதேசம் ஜுப்பால்- கோட்காயைச் சேர்ந்த நரிந்தர் பிராக்தா (69) கடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்எல்ஏவாக உள்ளார். இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தப்போதும் அவை பலன் அளிக்காமல் காலமானார். இவர், இமாச்சல பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவின் தலைமை கொறடாவாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தார். தற்போது பாஜக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார்.

இவரது மறைவு குறித்து அம்மாநில முதல்வர்  ஜெய் ராம் தாக்கூர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நரித்தர் பிராக்தாவின் மறைவு இமாச்சல் பிரதேச பாஜகவுக்கு பெரும் இழப்பு. தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நேர்மையான தலைவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று  தெரிவித்துள்ளார்.

அதேபோல் பல்வேறு தரப்பினரும் நரிந்தர் பிராக்தா  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 

newstm.in

Tags:    

Similar News