பாஜக எம்.எல்.ஏ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்..!!

பாஜக எம்.எல்.ஏ திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்..!!

Update: 2021-09-01 05:30 GMT

மேற்குவங்கத்தில் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பக்டா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. பிஸ்வஜித் தாஸ். இவர் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவர் பக்டா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிஸ்வஜித் தாஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பரிதோஷ் குமார் ஷாவை விட 9,792 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.  

இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ.வான பிஸ்வஜித் தாஸ் அக்கட்சியில் இருந்து விலகி இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். அவருடன் பாஜக கவுன்சிலரான மனோதோஷ் நாத்-வும் பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

திரிணாமுல் காங்கிரசில் மீண்டும் இணைந்தது தொடர்பாக பிஸ்வஜித் தாஸ் கூறுகையில், “சில தவறான புரிதல்கள் காரணமாக, செய்யக்கூடாத மாற்றங்களை செய்யப்பட்டுவிட்டன. நான் எனது வீட்டிற்கு மீண்டும் வந்துவிட்டேன். நான் எனது மாநிலத்திற்கும், எனது மக்களுக்கும் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றார்.

Tags:    

Similar News