மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஒரே கூட்டணியில் இருந்த சிவசேனா- பாஜக கடந்த தேர்தலில் பிரிந்தது. பின்னர் காங்கிரஸ், சரத்பவார் கட்சியுடன் கூட்டணி அமைத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சர் ஆனார்.

இநத நிலையில் தற்போது கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்திய நிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது. பேரவைக் கூட்டம் தொடங்கியது. சட்டபையில் பாஜக கடும் அமளியில் ஈடுபட்டது. சபையை வழிநடத்திய தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் அவதூறான வார்த்தைகளால் பேசியதுடன்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அவர்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் பாஸ்கர் ஜாதவ் கேட்டுக்கொண்டும், உறுப்பினர்கள் அமைதியடையவில்லை. தொடர்ந்து கூச்சல் எழுப்பிவந்தனர். 

இதனையடுத்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அமளியில் ஈடுபட்ட 12 பாஜக எம்எல்ஏக்களை ஒரு ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதனையடுத்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

newstm.in


 

Tags: