உத்தரப் பிரதேசத்தைத் தொடர்ந்து கர்நாடகத்திலும் புதிய மக்கள் தொகை மசோதா அமல்படுத்தப்படுத்த பாஜக தீவிரம்  காட்டி வருகிறது.  

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய மக்கள் தொகைக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜூலை 19 வரை அம்மாநில மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதா உத்தரப் பிரதேச மாநில சட்ட இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலர் சி.டி.ரவி, கர்நாடகாவிலும் புதிய மக்கள் தொகை கொள்கை அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உத்தரப் பிரதேசம், அசாமைத் தொடர்ந்து கர்நாடாகவும் , புதிய மக்கள் தொகைக் கொள்கையை அமல்படுத்தப்படவுள்ளது.

குறைவான இயற்கை வளங்களே உள்ள நிலையில், அவற்றைக்கொண்டு வருங்காலங்களில் மக்கள் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்வது கடினம் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, முழுமையான விவாதங்களுக்கு பிறகு புதிய மக்கள் தொகை மசோதா செயல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். 


newstm.in

Tags: