உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!!
உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி! கருத்துக் கணிப்பில் தகவல்!!
உத்தரப்பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
உத்தரப் பிரதேசத்திற்கு ஏழு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் மணிப்பூர் மாநிலத்திற்கு இரு கட்டமாகவும் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் தேசிய அளவில் உத்தரப் பிரதேசத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்தநிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. அதில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களை தனித்தே பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பா.ஜ.க 230 - 235 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி 160 - 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 3 - 7 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ்வாடி 3 -5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பிலும் பா.ஜ.க மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில், பா.ஜ.க 41.3 சதவீத வாக்குகளைப் பெற்று 252 - 272 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், சமாஜ்வாடி 33.1 சதவீத வாக்குகளைப் பெற்று 111 - 131 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் 7 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 13.1 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
newstm.in