பாஜக-வினர் பேரணி.. பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டி போலீசிடம் மனு!!
பாஜக-வினர் பேரணி.. பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டி திருப்பூர் போலீசிடம் மனு!!
பாஜக பேரணியின்போது பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டி தமிழகத்தின் பல இடங்களில் காவநிலையத்தில் பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு காவல் நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக இஸ்லாமிய மக்கள், அனைத்து பிரியாணி கடை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் "நாங்கள் பெரிய கடையில் பிரியாணி கடை நடத்தி வருகிறோம். வருகிற வெள்ளிக்கிழமை அன்று சிடிசி கார்னரில் இருந்து, பெரிய கடை வீதியாக பாஜக-வினர் பேரணி செல்ல இருக்கிறார்கள். அதனால் எங்கள் பிரியாணி கடைக்கும், அண்டாவுக்கும் பாதுகாப்பு தருமாறு பிரியாணி கடைகள் சங்கம் சார்பாக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் கோவையில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும் பிரியாணி கடைகளுக்கு பாதுகாப்பு கேட்டு மாநகர காவல்துறை இணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளனர். கன்னியாகுமரியிலும் பிரியாணி கடைகளுக்கும், அண்டாவிற்கும் பாதுகாப்பு அளிக்கக்கோரி பிரியாணி கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.
newstm.in