கண்மூடித்தனமான கட்டுப்பாடு.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
கண்மூடித்தனமான கட்டுப்பாடு.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மக்களின் போக்குவரத்துக்கு தடை விதிப்பது உள்ளிட்ட கண்மூடித்தனமான கட்டுப்பாடுகளை அரசுகள் விதிக்கக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரோட்ரிகோ ஆப்ரின் கூறியதாவது; “கொரோனா தொற்று பரவல் காலத்தில் மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
மக்களின் போக்குவரத்துக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் கண்மூடித்தனமாக கட்டுப்பாடுகளை விதிக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கவில்லை. பெரும்பாலான சமயங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்” என்றார்.