தடுப்பூசி போட்ட 6 பேருக்கு ரத்தம் உறைவு! 3 பேர் உயிரிழப்பு!! இலங்கையில் கொடூரம்!

தடுப்பூசி போட்ட 6 பேருக்கு ரத்தம் உறைவு! 3 பேர் உயிரிழப்பு!! இலங்கையில் கொடூரம்!

Update: 2021-04-22 16:27 GMT

இலங்கையில் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் 6 பேருக்கு ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வருகின்றன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

அதே போல் ஸ்புட்னிக்-வி, அமெபரிக்காவின் ஃபைசர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா ஆகிய தடுப்பூசிகள் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் இலங்கையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் 6 பேருக்கு ரத்தம் உறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் அங்கு தடுப்பூசி திட்டத்தை நிறுத்துவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பக்கவிளைவாக ஊசி போடும் இடத்தில் வலி, தலைவலி, சோர்வு, தசை அல்லது மூட்டு வலிகள், காய்ச்சல், சளி, குமட்டல் இருக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியில் அதிக அளவில் பக்க விளைவுகள் இருப்பதாக பல்வேறு நாடுகள் கூறிவந்தன. சில நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்திவிட்டன.

இந்நிலையில் தற்போது இலங்கையிலும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News