நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களிலிருந்து 92,700 ஊழியர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் விருப்ப ஓய்வு பெற்றனர்.ஊழியர்களை குறைப்பதன் மூலம் செலவை குறைக்கலாம் என கணக்கு போட்டு விருப்ப ஓய்வு திட்டத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் 50 மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

                                                

இதனைத் தொடர்ந்து, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 78,569 பேரும், எம்.டி.என்.எல். நிறுவனத்தில் 14,378 பேரும் விருப்ப ஓய்வில் விடை பெற்றனர்.  தற்போதைய நிலவரப்படி, பி.எஸ்.என்.எல்லில் 75, 217 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 

நாடு முழுவதும் கோடிக்காணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தை, பிரபல தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன் தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை என தொழிற்சாங்கள் விளாசுகின்றன. இதனால் அந்த தனியார் நிறுவனம் பெரும் லாபம் கொழிக்கும் என்பதும் கூடுதல் தகவல்.
 

newstm.in

Tags: