வெந்நீரில் வேகவைத்து, 3 நாட்கள் ஊற வைத்து.. பிரபலமாகும் கரப்பான்பூச்சி பீர் !!

வெந்நீரில் வேகவைத்து, 3 நாட்கள் ஊற வைத்து.. பிரபலமாகும் கரப்பான்பூச்சி பீர் !!

Update: 2021-12-17 08:15 GMT

காய்கறி, பழங்கள், இறைச்சி வகைகளான ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவற்றை பெரும்பாலானோர் உணவாக எடுத்து கொள்வர். ஆனால், உலகில் சீனா மற்றும் தென் ஆசியா பகுதிகளில் உள்ள நாடுகளில் பூச்சிகள் போன்றவற்றை உணவாக சாப்பிடுவது வழக்கம். இது அவர்களின் கலாச்சாரத்தில் ஒன்றாக பல காலமாக இருந்து வருகிறது.

இதனையும் தாண்டு இங்கு ஒரு நாட்டின் மக்கள் கரப்பான் பூச்சி பீரை தான் அதிகம் விரும்பி குடித்து வருகிறார்கள் என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஜப்பானில் தான் இந்த கரப்பான் பூச்சி பீர் தயாரிக்கப்படுகிறது. நாம் முகம் சுளிக்கிறோம் ஆனால் அந்த ஊர் மக்கள் கரப்பான் பூச்சி பீர் என்றாலே அதிகம் பிரியம் காட்டுகிறார்களாம்.‘

இந்த பீரை 'பூச்சி பீர்' அல்லது 'கோஞ்சு சோர்' என்று அழைக்கின்றனர். இதன் கசப்பு தன்மையை வைத்து 'சோர்' என்கிற ஆங்கில வார்த்தையை இதனுடன் இணைத்து வைத்துள்ளனர்.   

இந்த பீரை நன்னீரில் காணப்படும் கரப்பான் பூச்சிகளை கொண்டு தயாரிக்கின்றனர். இந்த வகை கரப்பான் பூச்சிகள் தண்ணீரில் வாழும் மற்ற பூச்சிகள் மற்றும் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. இந்த கரப்பான் பூச்சிகளை பிடித்து, அவற்றை வெந்நீரில் வேகவைத்து மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்திருக்க வேண்டும். பிறகு இவற்றின் சாற்றை தனியாக எடுத்து பானமாக மாற்றப்படுகிறது. இப்படி தான் இந்த கரப்பான் பூச்சி பீர் ஜப்பானில் தயாரிக்கப்படுகிறது. மேலும் இந்த கரப்பான் பூச்சிகளை சூப்களுக்கும், வேறு சில ரெசிபிகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

கபுடோகாமா (Kabutokama) எனப்படும் பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் இந்த பீர் ஜப்பானில் தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து இந்த பீரை ஜப்பானியர்கள் தயாரித்து குடித்து வருகின்றனர். இந்த கரப்பான் பூச்சி பீர் பாட்டிலின் விலை இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த கரப்பான் பூச்சி தயாரிப்பு முறையே கேட்டால் கொஞ்சம் குமட்டலாக தான் இருக்கும். இருப்பினும் இந்த பீரை தான் ஜப்பான் மக்கள் ஆரவாரத்துடன் பல காலமாக குடித்து வருகின்றனர். இதனை கேட்டதும் உங்களுக்கு அக்காமாலா, கப்சி போன்ற குளிர்பானங்களில் நியாபாகம்  வந்தால் நிர்வாகம் பொறுப்பில்லை..

newstm.in

Tags:    

Similar News