அயோத்தியில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு.. நீடிக்கும் பதற்றம்..
அயோத்தியில் 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு.. நீடிக்கும் பதற்றம்..
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள காசிராம் காலனியில் நேற்று மாலை திடீரென அடுத்தடுத்து 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதனால் பொதுமக்கள் கடும் பதற்றத்தில் உள்ளனர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்த பின்னர் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியின் புறநகர் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்ததாலும், 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் அயோத்தியில் பதற்றம் நீடிக்கிறது. இதற்கிடையே பாடாய்படுத்தும் கள்ளக்காதல் விவகாரமே குண்டு வெடிப்புக்கு காரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காசிராம் காலனியைச் சேர்ந்த ஜலிம் சிங் என்பவர் தான் குண்டு வீசியது தெரியவந்துள்ளது. மனைவி கோமல் அதேபகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவருடன் தவறான தொடர்பில் இருப்பதாக கூறி பிரிந்து ஜலிம் அலி மனைவியை பிரிந்தார். இந்நிலையில் தனது மனைவியின் வீட்டிற்கு மனோஜ் வருவதை கண்டு பின் இருவரும் ஒன்றாக இருப்பதை அறிந்து அவர்கள் மீது குண்டு வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே குண்டுவீசிவிட்டு தப்பியோடி ஜலிம் அலியை போலீசார் தேடி வருகின்றனர்.
newstm.in