பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

Update: 2021-12-17 06:07 GMT

ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்-க்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் பரவி வருகிறது. ஏற்கனவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. எனினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 2 டோஸ் தடுப்பூசியும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்ட ஐ.நா.சபை செய்தி தொடர்பாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன். நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன். 

நான் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளேன். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தி உள்ளேன். லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டில் இருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று அதில் ஸ்டீபன் துஜாரிக் குறிப்பிட்டுள்ளார்.

 2 டோஸ் தடுப்பூசியும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் , அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் பெரியளவில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாக இருக்காது எளிதில் குணமடைந்துவிடலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது.  

newstm.in

Tags:    

Similar News