ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!
ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி – பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு!!
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து உரையை தொடங்கிய பிரதமர் மோடி, உலகின் பல நாடுகளில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது என்றும், இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கி உள்ளது என்றும் கூறினார்.
நாம் அனைவரும் கவனமுடன் செயல்பட வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை கழுவது என்பதை நாம் முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்கள் யாரும் பதற்றம் அடைய தேவயைில்லை என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவில் 18 லட்சம் கொரோனா படுக்கைகள் தயராக உள்ளதாக கூறிய அவர், குழந்தைகளுக்கு 90,000 கொரோனா படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் அனைத்து மருத்துவமனைகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் ஆக்ஜிஸன் வசதி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துகளும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
My address to the nation. https://t.co/dBQKvHXPtv
— Narendra Modi (@narendramodi) December 25, 2021
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு ஜனவரி 10 முதல் கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அதேபோல் 60 வயதைக் கடந்தவர்கள், இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவித்துள்ளார்.
newstm.in