இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன... பொருளாதார உதவி கோரும் நடிகை!

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன... பொருளாதார உதவி கோரும் நடிகை!

Update: 2021-07-13 06:10 GMT

இந்தியில் வெளியான கிரைம் பேட்ரோல் அந்தாலஜி தொடரில் நடித்து புகழ்பெற்றவர் அனயா சோனி . இவர் அதலாட், இஷ்க் மேய்ன் மர்ஜவான், ஹை அப்னா தில் தோ அவாரா உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த 6 வருடத்துக்கு முன் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து அவர் தந்தை ஒரு சிறுநீரகத்தைக் கொடுத்தார். அதில் இருந்து ஒரு சிறுநீரகத்துடன் இயங்கி வந்த நடிகை அனயா சோனிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டது.

இதையடுத்து மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் படுத்திருந்த படி வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் உருக்கமாக பண உதவி கேட்டுள்ளார்.

அதில், அவர் கூறியிருப்பதாவது:

கடந்த சில நாட்களாக என் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டன. 2 சதவீதம் மட்டுமே அது செயல்படுகிறது. என் தாய் துணி வியாபாரம் செய்துவந்தார். சகோதரரும் நல்ல நிலையிலேயே இருந்தனர். சில நாட்களுக்கு முன் வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதில் மொத்தமாக போய்விட்டது. வைத்திருந்த சேமிப்பு மருத்துவச் செலவுக்கே முடிந்துவிட்டது. மருத்துவ  செலவுக்கு பணமில்லை. எனக்கு உதவி தேவைப்படுகிறது. தயவு செய்து உதவுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News