மறுத்த காதலன்.. கோபத்தில் முகத்தில் ஆசிட் வீசிய காதலி !!

மறுத்த காதலன்.. கோபத்தில் முகத்தில் ஆசிட் வீசிய காதலி !!

Update: 2021-09-06 19:25 GMT

ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் சுபாம்(23). இவரும் அதே பகுதியில் வசிக்கும் இவரின் உறவினரின் மகளுமான மனீஷாவும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவினர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெற்றோர் பெரிதாக எதிர்ப்பு காட்டவில்லை என கூறப்படுகிறது. 

இந்நிலையில் சுபாமிடம் காதலி மனீஷா தன்னை விரைவில் கல்யாணம் செய்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அதை கேட்ட சுபாம் தன்னுடைய குடும்பத்தாரிடம் இது விஷயமாக பேசி ,அவர்களின் முழு சம்மதமும் பெற்றபிறகு தான் கல்யாணம் செய்து கொள்வதாக கூறினார் .

மேலும் சுபாமிடம் அவரின் சகோதரியின் சில ஆட்சேபகரமான் படங்கள் இருப்பதாக அந்த மனீஷா அவரை சந்தேகப்பட்டு அதை டெலிட் செய்யுமாறு கேட்டார் . இந்த விவகாரம் அவர்கள் காதலில் பிரச்னையை உண்டாக்கியது. அவர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .

இந்த தகராறில் ஒரு கட்டத்தில் கடும் கோபமுற்று மனிஷா, தனது காதலன் சுபாம் மீது ஆசிடை வீசினார். இதனால் கடுமையான் தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட சுபாம் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் காதலன் தனது காதலி மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். எனினும் ஆபாச புகைப்படங்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இரு தரப்பிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Tags:    

Similar News