#BREAKING: தமிழகத்தில் 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்! ரூ.15,000லிருந்து ரூ.40,000க்கு ஊதியம் அதிகரிப்பு!
#BREAKING: தமிழகத்தில் 1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்! ரூ.15,000லிருந்து ரூ.40,000க்கு ஊதியம் அதிகரிப்பு!;
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்ற நிலையில், புது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும் மருத்துவ துறையில் புதிதாக நியமிக்கப்பட வேண்டியவர்கள் குறித்து கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்த 1,212 செவிலியர்களை நிரந்தர பணிக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டதால், இவர்களது ஊதியம் ரூ.15,000லிருந்து ரூ.40,000 ஆக அதிகரிக்கும். 2015-16ல் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்று பதிவு செய்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது.