#BREAKING: இனி வாரத்திற்கு 3 முட்டைகள்! ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு!
#BREAKING: இனி வாரத்திற்கு 3 முட்டைகள்! ஆளுநர் தமிழிசை அதிரடி உத்தரவு!
அரசியல் சூறாவளி சுழற்றியடிக்கும் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்ற பிறகு பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார்.
கிரண் பேடி நீக்கப்பட்ட பிறகு, அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதலாக அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. பொறுப்பை ஏற்றது முதல் புதுச்சேரியின் பல பகுதிகளிலும் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார் தமிழிசை.
அந்த வகையில் தற்போது, புதுச்சேரி அரசு அங்கன்வாடி குழந்தைகளின் புரதச்சத்து தேவையை கருத்தில் கொண்டு, இனி மேல் வாரத்திற்கு குழந்தைகளுக்கு 3 முட்டைகள் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.