#BREAKING: டி.வி.யில் இனி இதை பார்க்க முடியாது! மீறினால் 2 வருடம் சிறை !

#BREAKING: டி.வி.யில் இனி இதை பார்க்க முடியாது! மீறினால் 2 வருடம் சிறை !

Update: 2021-04-03 14:59 GMT

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அனல் காற்றையும், சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் தீவிரமாக இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணி முதல் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவுகள் முழுவதுமாக முடிவடையும் வரையில் அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதிக்கு பின்னர், தேர்தல் தொடர்பான எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலங்களையோ எந்த கட்சியினரும் நடத்த கூடாது. 

திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, குறுஞ்செய்தி,  வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வாயிலாகவும் அரசியல் கட்சியினர், பொது மக்களின் பார்வைக்கு கொண்டு விளம்பரங்களைக் கொண்டு செல்லக்கூடாது. 

இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. அதன் மூலமாக பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.

இந்த விதிமுறைகள் யார் மீறினாலும்,  இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்ந்து தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி நிர்வாகிகள், களப்பணியாளர்கள், குறிப்பிட்ட தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஏப்ரல் 4ம் தேதி மாலை 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபம், சமுதாயக்கூடங்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்கக் கூடாது என்றும், தங்கியுள்ளனரா என்றும் கண்காணிக்கப்படும். வாக்குப்பதிவு நாளன்று வேட்பாளர்கள், தங்களது சொந்த பயன்பாட்டிற்காக ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டிற்காக ஒரு வாகனம் என்ற எண்ணிக்கையில் மட்டுமே வாகன அனுமதி பெற உரிமை உண்டு. 

வாக்காளர்களை அழைத்து வருவதற்கோ, மீண்டும் வீட்டில் விடுவதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது.  தேவையில்லாத கூட்டத்தை அரசியல் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது என்று அரசியல் கட்சி கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்துள்ளார்

Tags:    

Similar News