#BREAKING:- அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது..!!

#BREAKING:- அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது..!!

Update: 2022-01-05 13:41 GMT

பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஓசூரில் கைது.

ஆவின் துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இதில் முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதால், கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8  தனிப்படைகள் அமைத்தது.

கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும் இதுவரை ராஜேந்திர பாலாஜி எங்கு இருக்கிறார் என தெரியாமல் காவல்துறை தேடி வந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஓசூரில் சற்று முன் கைது செய்யப்பட்டார் 

இந்நிலையில்,19 நாட்கள் தலைமறைவாக  இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களை கர்நாடகாவில் கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை 


 

Similar News