#BREAKING:- கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு நடிகர்!

#BREAKING:- கொரோனாவுக்கு பலியான மேலும் ஒரு நடிகர்!

Update: 2021-05-10 16:57 GMT

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு. கடந்த 1ஆம் தேதி முதல் முறையாக தினசரி தொற்று 4 லட்சத்தைத் தாண்டி அதிர்ச்சி அளித்தது.     அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பாலிவுட்டைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையுலக பிரபலங்கள் மரணமடைவது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கொரோனாவிற்கு குணச்சித்திர நடிகர் பாண்டு,இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா,பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல்,தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகர் ஜி. ஆனந்த்,தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் காலமானார்கள்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் டி நரசிம்மராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

நடிகர் டி நரசிம்மராவ் சினிமாவில் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டி நரசிம்மராவ் மறைவிற்கு நடிகர் நானி அவரது இரங்கலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்...


 

Tags:    

Similar News