#BREAKING மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா- டி20 உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தல் !!

#BREAKING மீண்டும் ஃபார்முக்கு வந்த ஆஸ்திரேலியா- டி20 உலகக்கோப்பையில் முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தல் !!

Update: 2021-10-23 19:03 GMT

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்கியது. அபுதாபியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, துவக்கம் முதலே ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்கள வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் வரிசையாக ஆட்டமிழந்தனர். 

எனவே, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்களே எடுத்தது.  அதிகபட்சமாக மார்க்ராம் 40 ரன்கள் சேர்த்தார். ஹென்ரிச் 13 ரன்கள், டேவிட் மில்லர் 16 ரன்கள், ரபாடா 19 ரன்கள் (நாட் அவுட்)  சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 119 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியா அணியிலும் பேட்டிங் வரிசை பெரும் தடுமாற்றத்தை அடைந்தது. தொடக்க வீரரமாக களமிறங்கிய கேப்டன் பிஞ்ச் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வார்னர் 14, மிட்சல் மார்ஷ் 11, மேக்ஸ்வெல் 18 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மறு முனையில் நிதானமாக விளையாடிய ஸ்மித் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்துவந்த ஸ்டானிஸ் மற்றும் வாடே ஆகியோர் ரன் எடுத்த தடுமாறினர். அந்தஅளவுக்கு தென்னாப்ரிகா வீரர்களின் பந்துவீச்சி நேர்த்தியாக இருந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்ட நிலையில் 19.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி இலக்கை எட்டி வெற்றிபெற்றது.

இதன்மூலம் உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்று முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றுள்ளது. 


newstm.in

Tags:    

Similar News