#BREAKING பவுமா, டஸன் அதிரடி சதம்.. இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு !
#BREAKING பவுமா, டஸன் அதிரடி சதம்.. இந்திய அணிக்கு 297 ரன்கள் இலக்கு !
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் போட்டி தற்போது போலாண்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.
அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 80 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வெங்கடேஷ் ஐயர் அடித்த த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார் மார்க்ரம்.
இருப்பினும், நிதானமாக விளையாடி பவுமா அரைசதம் அடிக்க, அவருடன் சேர்ந்த வான்டர் டூசன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். இதனால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டது. ரன்ரேட் 5.50க்கு மேல் அதிகரித்தது. நிதானமாக விளையாடிய கேப்டன் புவமா சதம் அடித்தார். பின்னர் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதேநேரத்தில் மறுமுனையில் அதிரடி காட்டிய வான்டர் டூசன் சதம் அடித்து அசத்தினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்கள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தி வருகிறார்.
newstm.in