#BREAKING:- வெளியானது தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் !!

#BREAKING:- வெளியானது தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் !!

Update: 2021-06-21 18:00 GMT

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தளபதி 65  படத்தை கோலமாவு கோகிலா மற்றும் மான்ஸ்டர் படங்களை இயக்கிய நெல்சன் தீலிப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் மீது ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் தளபதி 65 படத்தில் விஜய், பூஜா ஹெக்டே உடன் யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

நாளை விஜய் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அதை முன்னிட்டு அவர் நடித்து வரும் தளபதி 65 படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது  தளபதி 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது....இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் துப்பாக்கியுடன் இருக்கிறார். பார்ப்பதற்கு செம மாஸாக இருக்கும் இந்த ஸ்டில்லை அவரது ரசிகர்கள் ட்ரெண்டாகி வருகிறார்கள் 

 


 

Tags:    

Similar News