#BREAKING: காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி காலமானார்!

#BREAKING: காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மனைவி காலமானார்!

Update: 2021-05-04 14:38 GMT

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் மனைவி இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 
இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் கூறியிருக்கும் பீட்டர் அல்போன்ஸ், 46 ஆண்டு காலம் என்னோடு இல்லறம் நடத்தி எனக்கும் என்பிள்ளைகளுக்கும் வழிகாட்டும் ஒளிவிளக்காக இருந்த என் அருமை மனைவி இன்று இறைவனடி சேர்ந்தார் என தெரிவித்துள்ளார்.


அவர்களின் இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 12 மணிக்கு சென்னை அண்ணாநகர் புனித லூக்கா ஆலயத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

ஜி. கே. மூப்பனார் தலைமையில்  ”தமிழ் மாநில காங்கிரசு” தொடங்கப்பட்ட போது, காங்கிரஸிலிருந்து வெளியேறிய பீட்டர் அல்போன்ஸ், கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags:    

Similar News