#BREAKING:-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா உறுதி !!

#BREAKING:-மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா உறுதி !!

Update: 2021-04-16 18:20 GMT

இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்த போதிலும்  சாமானிய மக்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் வரை கொரோனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.  பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியாகவில்லை.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 12 கோடிக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோருக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில், மத்திய சுற்றுசூழல்த்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் கடந்த 3 நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Newstm.in

Tags:    

Similar News