நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில் இந்தியாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள் என பலர் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். தற்பொழுது முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா ஆகியோருக்கு  நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை தேவகவுடா டிவிட் மூலம் உறுதிப்படுத்தி உள்ளார்.என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா சோதனை செய்துகொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 2020 ஆம் ஆண்டு தேவகவுடா அவர்களின் மூத்த மகனும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி அவர்களின் அண்ணனும் ஒலநரசிபுர தொகுதியின் எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு பெங்களூர் விமான நிலைய ரோட்டில் உள்ள மணிப்பால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: