#BREAKING: திமுக பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

#BREAKING: திமுக பொதுசெயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Update: 2021-04-08 11:34 GMT


திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சமீபத்தில் முடிவுற்ற நிலையில், மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று பொதுமக்களிடையே வதந்தி பரவி கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

இந்நிலையில், திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.  அவ்வபோது அவருக்கு திடெரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தார்.இந்நிலையில் அவ்ருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டார்  

கடந்த வாரங்களுக்கு முன்னர் காட்பாடியில் துரைமுருகன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில தினங்களுக்கு முன் தான் பாளையங்கோட்டையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி  உடல் சோர்வு இருந்த நிலையில் பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்.

அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்த கூட்டங்களில் கலந்து கொண்ட தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதும், முக கவசம் அணிவதும் தான் கொரோனா தொற்றை அதிகரிக்க விடாமல் செய்யும் என்று சுகாதார செயலாளர் எச்சரித்துள்ளார்.

 

Tags:    

Similar News