#BREAKING: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்திய அரசு அறிவிப்பு!

#BREAKING: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மத்திய அரசு அறிவிப்பு!

Update: 2021-04-24 12:06 GMT

இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு, இலவசமாக தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், மாநில அரசுகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


மே 1ம் தேதி முதல் 18 வயதிற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க மத்திய அரசு அறிவித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
முன்னதாக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150ம், மாநில அரசுக்கு ரூ.400 எனும் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது பலந்த விமர்சனங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்த செய்தி வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளை ரூ.150 என்று வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் இலவசமாக தர உள்ளதாக தெரிவித்துள்ளது.
 

Tags:    

Similar News