#Breaking : மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா தாக்கல்!
#Breaking : மக்களவையில் தேவேந்திர குல வேளாளர் சட்டத்திருத்த மசோதா தாக்கல்!
தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 சாதியினரை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்!
தமிழகத்தில், தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரைக்கான தீர்வு 30 நாட்களுக்குள் கிடைக்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் பட்டியல் இனத்தில் உள்ள தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய சாதிகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அழைக்கவேண்டும் என்ற கோரிக்கை மத்திய, மாநில அரசுகளுக்கு விடுக்கப்பட்டது.
7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. இதனை ஏற்று, தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பண்ணாடி, வாதிரியான் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று "தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட" மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் இப்பிரிவினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட சலுகைகள் தொடரும் என தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற ஒரே பொதுப்பெயரில் அறிவிக்க கோரிய பரிந்துரை மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 7 சாதியினரை ஒருங்கிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அழைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக, தமிழகத்தில் ஆளும் அதிமுக சார்பில், மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளதால், தமிழகத்தில் தென் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகளை அறுவடை செய்யும். இதனால், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கலக்கிப்போய் உள்ளது.