#BREAKING: இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!

#BREAKING: இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி!

Update: 2021-03-19 11:48 GMT

ஆறு, சாமி, சிங்கம், போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி தற்சமயம் பழனி, நெய்க்காரப்பட்டியில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், கடும் காய்ச்சல் காரணமாக திடீரென நேற்று பழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஹரியுடன் படப்பிடிப்பில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஹரி கடும் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஹரிக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு பழனியில் சில தினங்களாக நடைப்பெற்று வந்த நிலையில், படப்பிடிப்பில் ஒருவருக்கு கொரோனா, இயக்குநர் ஹரிக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் இப்போது தான் திரைத்துறையினர் படப்பிடிப்புகளில் கலந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினியின் ‘அண்ணாத்தே’ படப்பிடிப்பும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்தே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியின் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட படத்தின் ஹீரோ நடிகர் அருண் விஜய்யும், நாயகி ப்ரியா பவானி சங்கரும்  தற்போது தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

Tags:    

Similar News