#BREAKING:- இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார் !!
#BREAKING:- இயக்குனர் ஷங்கரின் தாயார் காலமானார் !!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தாயார் சற்று முன் சென்னையில் காலமானார்.
இயக்குனர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் தான் . அவர் இயக்கும் ஒவ்வொரு படமும் பிரமாண்டமும் சமூக கருத்துக்களையும் கொண்டதாக இருக்கும். மேலும், சினிமாவில் படங்களை இயக்குவதில் தனக்கென ஒரு பாதையை கொண்டவர். இவருடைய படங்கள் எல்லாம் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் ஷங்கர் படத்துக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது என்றும் சொல்லலாம். இயக்குனர் ஷங்கர் அவர்கள் 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் அப்பா பெயர் சண்முகம் அம்மா பெயர் முத்துலட்சுமி. சங்கர் அவர்கள் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் முதன்மையானவராக ஷங்கர் திகழ்ந்து வருகிறார். இவர் ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 பிள்ளைகள் உள்ளார்கள். தற்போது இயக்குனர் ஷங்கர் அவர்கள் பல வருடங்கள் கழித்து உலக நாயகன் கமலஹாசனை வைத்து “இந்தியன் 2” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஷங்கர் அவர்களின் தாயார் S.முத்துலக்ஷ்மி அவர்கள் வயது மூப்பு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. ஷங்கரின் தந்தை ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தற்போது தாய் உயிரிழந்துள்ளார்.இவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர் .
அண்மையில் கொரோனாவிற்கு குணச்சித்திர நடிகர் பாண்டு,இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா,பிரபல இந்தி குணசித்திர நடிகை அபிலாஷா பட்டீல்,தெலுங்கு சினிமாவில் பிரபலமான பின்னணிப் பாடகர் ஜி. ஆனந்த்,தயாரிப்பாளர் அந்தோணி சேவியர்,நெல்லை சிவா,துணை நடிகர் மாறன்,ரஜினி முருகன் படத்தில் நடித்த பவுன்ராஜ்,நடிகர் நிதிஷ் வீரா, காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.