#BREAKING - கொரோனா குறித்து முன்பே எச்சரித்த மருத்துவர் மரணம்
சீனாவில் கொரோனோ வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் கொரோனோ வைரஸ் குறித்து தொடக்கத்திலேயே எச்சரிக்கைவிடுத்த சீன மருத்துவர் இந்த வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.. இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து உலகை அச்சுறுத்தும் மிகக்கொடிய வைரஸாக கொரோனா மாறியிருக்கிறது. இன்று வரை இதற்கு தீர்வு தரக்கூடிய தடுப்பு மருந்தை மருத்துவர்கள் கண்டறியவில்லை என்றே கூறப்படுகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டியது. இதுவரை 24,500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி சீன மருத்துவர் லீ வென்லியாங், சக மருத்துவர்களின் கொரோனா வைரஸ் குறித்து எச்சரிக்கைவிடுத்தார். அதில் அவர், தன்னிடம் சிகிச்சை பெறவந்த கடல் உணவுகளை விற்பனை செய்யும் உள்ளூர் மார்க்கெட்டைச் சேர்ந்த 7 பேர் புதிய வகையான வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் அதில், நண்பர்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் எச்சரித்துள்ளார்.
இதையடுத்து அவர் அனுப்பிய செய்தி ஆன்லைனில் வைரலாக, வதந்தியைப் பரப்பியதாக அவர்மீது அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் அவரை அதிகாரிகள் நேரில் சென்று எச்சரித்தனர். பின்னரே லி வென்லியாங் கூறியதுபோல கொரோனா வைரஸின் கோரப்பிடியில் சீனா சிக்கியுள்ளது. இதற்கிடையே வைரஸ் பாதித்த நோயாளி எனத் தெரியாமல் ஒருவருக்கு சிகிச்சையளித்தபோது கடந்த 10ஆம் தேதி லி வென்லியாங்கிற்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தொடர் சிகிச்சையில் இருந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
newstm.in