#BREAKING:- சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு..!!

#BREAKING:- சர்வதேச விமானங்களுக்கான தடை நீட்டிப்பு..!!

Update: 2022-01-19 13:41 GMT

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவல் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடையை பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டிருக்கிறது. 

சரக்கு சேவை விமானங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப, விமான சேவை படிப்படியாக அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News