#BREAKING : 24ம் தேதி முதல் முன்பதிவு! முன்பதிவுக்கான இணையதளம் வெளியீடு!

#BREAKING : 24ம் தேதி முதல் முன்பதிவு! முன்பதிவுக்கான இணையதளம் வெளியீடு!

Update: 2021-04-22 17:43 GMT

இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது  கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. விரைவில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

2021ஜனவரி 16ம் தேதி முதலில் முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தடுப்பூசி  முதல் கட்டமாக செலுத்தப் பட்டது. அடுத்த கட்டமாக , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய்கள் உள்ள 45 வயதைக் கடந்தவர்களுக்கும் மார்ச் 1முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவுபடுத்தும் வகையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான  முன்பதிவு ஏப்ரல் 24 தொடங்க இருக்கிறது. இதனை செலுத்திக் கொள்ள COWIN வலைதளத்தில் முன்பதிவுசெய்து கொள்ளலாம்.

பயனாளிகள் cowin.gov.in என்ற வலைதளத்திற்குள் சென்று, அவர்களுடைய மொபைல் எண்  அல்லது ஆதார் எண்ணைப் பதிவுசெய்ய வேண்டும். அதன்பின் சம்பந்தப்பட்ட மொபைலுக்கு ஓடிபி வரும். அதனைப் பதிவிட வெரிபிகேசன் தகவல் சரிபார்க்கப்பட்டதும், தடுப்பூசி பதிவுக்கான பக்கத்தில்  போட்டோ ஆதாரம் போன்ற  தகவல்களை பதிவு செய்ய வேண்டும். இந்த வலைதளத்தில் எந்தத் தேதியில், எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்த தகவல்களையும்  தேர்ந்தெடுக்கலாம். 

Tags:    

Similar News