#BREAKING கருணாநிதியின் 50 ஆண்டுகால உதவியாளர் சண்முகநாதன் காலமானார் !!
#BREAKING கருணாநிதியின் 50 ஆண்டுகால உதவியாளர் சண்முகநாதன் காலமானார் !!
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் இன்று(டிச.21) காலமானார். இவருக்கு வயது 80. சண்முகநாதன் 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியுள்ளார். அவருக்கும் கருணாநிதிக்கும் இடையேயான உறவு அவ்வளவு எளிதில் யாராலும் புரிந்துக் கொள்ள முடியாத ஒன்றாகவே இருந்தது. கலைஞர் கருணாநிதியை பற்றி தலை முதல் கால் வரை தெரிந்து வைத்திருப்பவராக சண்முகநாதன் திகழ்ந்தார்.
கோ.சண்முகநாதன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் காலமானதாக கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
newstm.in