கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம் என குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். இதனையடுத்து மு.க. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் வாழ்த்து கூறினர்.

இந்த நிலையில், பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதற்காக மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், கொரோனோ தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.


newstm.in

Tags: